Feb 05

வெந்து தணிந்தது காடு

திரைப்படத் திரையிடல் Starts on Sun, Feb 05, 2023 03:00 PM 1h

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குறிப்பு

பாவனையில் உள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றை பதிவதன் மூலம் மாற்றங்கள் ஏற்படின் நாம் தொடர்பு கொள்ள இலகுவான வழி ஒன்றை ஏற்படுத்துங்கள்.

சந்தேகங்கள், சிரமங்கள் தொடர்பான விசாரணைக்கு இவ் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் 0094750409201 (உடன் பதில் கிடைக்காவிடில் உங்களுக்கு மீள் அழைப்பு எடுக்கப்படும்)

நுழைவுச்சீட்டாகக் கிடைக்கும் QR Code ஐ சேமித்து வைத்திருக்கவும். நீங்கள் தெரிவு செய்த காட்சிக்கு 15 நிமிடத்துக்கு முன்னர் சமூகமளிப்பது சிரமங்களை குறைப்பதற்கு உதவும்.

வெளிநாட்டில் இருப்பவர்களும் நுழைவுச்சீட்டைப் முன்னரே பெற்று வெளியீட்டுச் செலவுகளுக்கு உதவலாம். கால வரிசையில் உங்கள் நகரங்களில் திரையிடப்படும். திரையிடல் தவறும் பட்சத்தில் திரையிடல்கள் முடிந்தவுடன் தனிப்பட்ட Link அனுப்பி வைக்கப்படும் அல்லது பணம் மீளளிக்கப்படும்.



ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு”
”மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன”

இத்திரைப்படமானது ஈழ யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப்படும் முதலாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை உருவாக்கிய மதிசுதாவால் கடந்த 4 வருடங்களாக ஒவ்வொருவரிடமும் சிறுகச் சிறுகச் சேகரித்த குழுமச் சேர்ப்புப் பணத்தில் இத்திரைப்படம் உருவம் பெற்றிருக்கின்றது. இதில் 203 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பங்காற்றியிருந்தார்கள். இலங்கை அளவில் அதிகளவானவர் இணைந்து தயாரித்தது என்ற பதமானது ஒரு வரலாற்று சாதனையாகும்.

இதுவரை 15 நாடுகளில் 28 சர்வதேச விருதுகளை இத்திரைப்படம் பெற்றிருக்கின்றது. ஈழத்தின் பழம்பெரும் பாடகியான பார்வதி சிவபாதம் அவர்கள் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்ததுடன் 2 நாடுகளில் சிறந்த நடிகைக்கான சர்வதேச விருதையும் பெற்றிருக்கின்றார்.

சிங்கள மொழித் திரைப்படங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கையில் இத்திரைப்படமானது 4 வரலாற்று சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளது.
1. உலக அளவில் சிவிலியன்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட முதல் பங்கர் திரைப்படம் இதுவாகும்.
2. ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்.
3. அதிகளவான மக்கள் இணைந்து முதலிட்டுத் தயாரித்த திரைப்படம்.
4. அதிகளவான விருதைப் பெற்ற கைப்பேசித் திரைப்படம்.

இத்திரைப்படமானது எங்களோடு வாழ்ந்து எங்களுக்காக மாண்டவர்களின் வரலாற்றுக் கதையாகும். இதை உங்களது நண்பர்கள் உறவுகள் அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டுகின்றோம்.

ஈழ சினிமாவின் தேவையை நீங்கள் உணரும் பட்சத்தில், இது போன்ற திரைப்பட முயற்சிகளின் வெற்றிக்காக எம்மோடு தோள் கொடுக்கும்படி அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.

”எம் வரலாறை எம் பேனைகளாலும் கமராக்களாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எழுதுவோம்”